வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக வியாழேந்திரன் பதவிப் பிரமாணம்
வர்த்தகம் மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில், சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
அவர் தற்போது பொது மனுக்கள் மீதான நாடாளுமன்றக் குழு, வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழுவின் பிரதிநிதியாகவும் காணப்படுகிறார்.
சதாசிவம் வியாழேந்திரன்
சதாசிவம் வியாழேந்திரன் மட்டக்களப்பு மாவட்டத்தை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக வியாழேந்திரன் கடந்த ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டார்.
இதற்கு முன்னர்ஏறாவூர்ப்பற்று, மண்முனை வடக்கு, மண்முனை தென் மேற்கு, போரதீவுப்பற்று, கோறளைப்பற்று தெற்கு பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழு தலைவராக அவர் காணப்பட்டார்.
வர்த்தக இராஜாங்க அமைச்சர்
நாடாளுமன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அவர், இதற்கு முன்னர் வர்த்தக இராஜாங்க அமைச்சராக பதவி வகித்தார்.
இந்நிலையில், அதற்கு மேலதிகமாக சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிபிரமானம் செய்துக்கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

விசா கட்டுப்பாடுகள்: பிரித்தானியாவை விட்டு வெளியேறிய பல்லாயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் News Lankasri
