யாழில் அதிசொகுசு கார் வாங்கிய வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தில் அதிநவீன சொகுசு கார் ஒன்றை மோசடியான முறையில் பெற்றுக்கொள்ள முயற்சித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டில் வசிக்கும் பெண்ணொருவருக்கு சொந்தமான வாகனமே இவ்வாறு மோசடியாக பெற முயற்சிக்கப்பட்டுள்ளது.
குறித்த காரினை வாடகை அடிப்படையில் பயன்படுத்துவதற்காக அமர்தப்பட்ட சாரதியால் இந்த மோசடி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
போலி ஆவணங்கள்
இதன்படி காரின் உரிமையை மாற்றுவதற்கான ஆவணங்களை மோசடியான முறையில் சமர்ப்பிக்க முயற்சித்த வேளையில் சாரதி சிக்கியுள்ளார்.
குறித்த பெண்ணின் முறைப்பாட்டுக்கு அமைய விசரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கார் சாரதியை கைது செய்து , மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
நீதிமன்றில் குற்றத்தை சாரதி ஏற்றுக்கொண்ட நிலையில், அவரை பிணையில் செல்ல நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
