அயர்லாந்து இணைப்பு குறித்த ட்ரம்பின் கருத்துக்கு பிரித்தானியா பதில்
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள வட அயர்லாந்து, அயர்லாந்து குடியரசுடன் இணைவது தொடர்பில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்த கருத்துக்கள் குறித்து பிரித்தானிய பிரதமர் அலுவலகம் தனது விளக்கத்தை அளித்துள்ளது.
டப்ளினில் அயர்லாந்து பிரதமரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், அயர்லாந்து குடியரசும் வட அயர்லாந்தும் ஒன்றிணைவதை தான் விரும்புவதாகவும், அது காலப்போக்கில் நடக்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
புதிய வாக்கெடுப்பு
ட்ரம்பின் இந்தக் கருத்தைத் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாமின் ஊடகப் பேச்சாளர், வட அயர்லாந்தின் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்தின் கொள்கையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரித்தானிய பிரதமர், வட அயர்லாந்தில் மற்றுமொரு எல்லைக் வாக்கெடுப்பை நடத்துவதற்குப் பெரும்பாலான மக்களின் ஆதரவு இருப்பதாகத் தெரியவில்லை என்றும், மக்கள் விருப்பத்தில் மாற்றம் ஏற்படும் வரை புதிய வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்படமாட்டாது என்றும் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.