லொறி மோதி சிறுவன் பரிதாப மரணம்!
இரத்தினபுரியில் லொறி மோதி சிறுவன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் இரத்தினபுரி- உடவளவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உடவளவை - தனமல்வில வீதியின் மலபொட்டுஆர பகுதியில் நேற்று முன்தினம்(8) இடம்பெற்றுள்ளது.
பேரியல் சந்தியிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த லொறி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற சிறுவன் மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழப்பு
விபத்தில் படுகாயமடைந்த சிறுவன், உடவளவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் உடவளவை பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுவன் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடவளவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, இரத்தினபுரி, எலபத்த பொலிஸ் பிரிவின் கனதொல - இலுக்தென்ன வீதியில் உள்ள 79 ஆம் இலக்க இறப்பர் தோட்டத்துக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை(6) மாலை லொறி மோதி 11 மாணவி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.