ஜேர்மனி சென்ற விமானம் துருக்கியில் திடீரென தரையிறக்கம் : வெளியான காரணம்
இந்தியாவிலிருந்து ஜேர்மனி நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பின்னர் அது வதந்தி என தெரியவந்துள்ளது.
இந்தியாவின் மும்பை விமான நிலையத்திலிருந்து நேற்று (06) Vistara விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, ஜேர்மனியின் பிராங்பர்ட் விமான நிலையம் நோக்கிப் புறப்பட்டது.
அதில், 234 பயணிகளும், 13 பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
வெடிகுண்டு மிரட்டல்
இந்நிலையில் விமானம் வானில் பறந்துகொண்டிருக்கும்போது, விமானத்தின் கழிவறையில், ’விமானத்தில் வெடிகுண்டு உள்ளது’ என எழுதப்பட்ட காகிதம் ஒன்று கிடைத்துள்ளது.
இதனையடுத்து உடனடியாக, விமானம் துருக்கியிலுள்ள Erzurum நகரில் தரையிறக்கப்பட்டுள்ளது. அந்நகர அதிகாரிகள் உடனடியாக விமானத்தை சோதனையிட்டுள்ளார்கள்.
இதன்போது சோதனையில், விமானத்தில் சந்தேகத்துக்குரிய எந்த பொருட்களும் கிடைக்கவில்லை. ஆகவே, வெடிகுண்டு மிரட்டல் ஒரு வதந்தி என தெரியவந்துள்ளது.
என்றாலும், Vistara விமான நிறுவனம், பயணிகளுக்காக மாற்று விமானம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 14 மணி நேரம் முன்

சுந்தர் பிச்சையின் புதிய சம்பள விபரம் வெளியானது... பாதுகாப்பிற்கு மட்டும் இத்தனை கோடிகளா? News Lankasri

Post Office Special திட்டத்தில் ரூ.10 லட்சம் டெபாசிட் செய்தால்.., 5 ஆண்டுகளில் வட்டி மட்டுமே லட்சக்கணக்கில் News Lankasri
