கொல்கத்தா அணியில் இணையவுள்ள குமார் சங்கக்கார
ஐபிஎல் - 2025க்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியில் ஒரு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார இணையவுள்ளதாக கூறப்படுகிறது.
குமார் சங்கக்கார தற்போது வரை ராஜஸ்தான் ரோயல்ஸ் (RR) அணியுடன் இணைந்துள்ளார்.
எனினும், இந்த ஐபிஎல் தொடருடன் அவர் பிரிந்து செல்லக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடர் 2025
முன்னதாக, கவுதம் கம்பீர் கொல்கத்தா அணியின் வழிகாட்டி பதவியை வகித்தார், ஆனால் இப்போது அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்படுவதால் அவரின் இடம் வெற்றிடமாகியுள்ளது.
இந்நிலையில், கம்பீருடன் அபிஷேக் நாயர் மற்றும் ரியான் டென் டோஸ்கேட் ஆகியோரும் கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறி இந்திய தேசிய அணியின் பயிற்சித் துறையில் சேர்ந்துள்ளனர்.
இதேவேளை, தற்போது கொல்கத்தா அணிக்கு தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளராக பாரத் அருண் ஆகியோர் செயல்படுகின்றனர்.

தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை தொடர்பான ஒன்ராறியோ அரசாங்கத்தின் சட்டம்: வழங்கப்பட்டுள்ள உறுதியான தீர்ப்பு

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 7 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க கொலை மிரட்டல்... எதற்கும் தயார் நிலையில் ஈரான் இராணுவம் News Lankasri

ட்ரம்பின் வரி யுத்தம்... 5 விமானங்களில் ஐபோன்களுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய ஆப்பிள் நிறுவனம் News Lankasri
