கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் - திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு
இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் ஒருநாள் சேவை கணினி முறைமையில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடவுச்சீட்டு மற்றும் ஏனைய பயண ஆவணங்களை விநியோகிப்பதில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த கோளாறு காரணமாக அவசரமாக பயண ஆவணங்கள் தேவைப்படும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள்
அத்துடன், ஒருநாள் சேவைக்கான விண்ணப்பங்களை வழங்கும் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

திணைக்களத்தின் கடவுச்சீட்டுப் பிரிவு மூலம், ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகள் ஆகிய இரண்டின் கீழும் கடவுச்சீட்டுக்களை விநியோகித்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
கடந்த பெப்ரவரி மாதமும் இதேபோன்று கணினி முறைமையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒருநாள் சேவை உள்ளிட்ட திணைக்களத்தின் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டு, பின்னர் அது வழமைக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.