காசா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட பாரிய தாக்குதல் : 48 மணி நேரத்தில் 61 பேர் பலி
பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் காரணமாக கடந்த 48 மணிநேர இடைவெளியில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்
இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் தலைமையிலான போராளிகளுடன் போரை ஆம்பித்து பதினொரு மாதங்கள் ஆகியுள்ளன.
இராஜதந்திரங்கள்
இந்தநிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், காசாவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கும், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கும், மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திரங்கள், இதுவரை தோல்வியடைந்துள்ளன.
இதற்கிடையில் ஜபாலியா நகர்ப்புற அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாகச் செயல்படும் ஹலிமா அல்-சதியா பள்ளி வளாகத்தின் மீது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
எனினும் வளாகத்திற்குள் இருந்த ஹமாஸ் கட்டளை மையத்தை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
காசா நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் இன்று இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW