யாழில் கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்பு (Photo)
யாழ்ப்பாணம் - கொழும்புத்துறை பகுதியிலிருந்து கடற்தொழிலுக்கு சென்றவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொழும்புத்துறை - உதயபுரம் பகுதியைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை டென்சில் ராஜேந்திரன் (வயது 53) என்பவரே இவ்வாறு உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்றையதினம் தனது மகனுடன் தொழிலுக்குச் சென்ற வேளை கடலில் தவறி விழுந்துள்ளார்.
கடலில் வீழ்ந்து காணாமல் போனவரை கடற்தொழிலாளர்கள் தேடிவந்த நிலையில், இன்றையதினம் நெடுந்தீவு கடற்பரப்பில் கரையொதுங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்க
பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.






தமிழகத்தில் டாப் டக்கர் வசூல் வேட்டை செய்துள்ள சிவகார்த்திகேயனின் மதராஸி.. மொத்த வசூல் விவரம் Cineulagam

கங்குவா படத்திற்கு பின் சிறுத்தை சிவா இந்த ஹீரோவைத்தான் இயக்கப்போகிறாரா.. லேட்டஸ்ட் தகவல் Cineulagam
