சம்மாந்துறையில் பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது நேற்று (22) உடங்கா -02 பௌஸ் மாவத்தையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் மூன்று வயது மதிக்கத்தக்க முஹம்மத் லுக்மான் என்ற ஆண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழப்பு
சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் சென்றிருந்த குறித்த சிறுவனை பொதுமக்களுடன் இணைந்து பொலிஸார் தேடிய நிலையில் அச்சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் இருந்து சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.
இச்சிறுவன் தவறி குறித்த குழியில் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா என மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன் இச்சம்பவத்தில் கிடைக்கப்பெற்ற சிசிரிவி காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் மரணமடைந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளது.
மேலதிக விசாரணைகள்
எனினும் சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளது.
மேலும், மரணம் அடைந்த சிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச. ஜெயலத் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்... நடிப்பவர்கள் யார் யார் பாருங்க Cineulagam
