தெல்தெனிய சடலம் மீட்பு! மற்றுமொருவர் கைது
தெல்தெனிய பகுதியில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில் ஓட்டுநர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கைது
நுவரெலியா பொலிஸின் விசேட பொலிஸ் குழுவினர் குண்டசாலை பகுதிக்குச் சென்று இன்று (24) இந்த நபரைக் கைது செய்துள்ளனர்.
இந்த விடயத்தை நுவரெலியா பிரிவிற்கு பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (01.06.2026) சந்தன பஸ்நாயக்க தெரிவித்தார்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர், கைது செய்யப்பட்டுள்ள இந்த ஓட்டுநரின் நண்பர் என்பதுடன், சந்தேகநபரின் தொலைபேசி தரவுகளின் ஊடாகவே இந்த ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளதாக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
You may like this..