முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான வழக்கு தொடர்பில் வெளியான தகவல்..
முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசிக்கு எதிரான அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நெதர்லாந்து அரசாங்கத்தினால் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டிருந்த வாகனமொன்றை, தனது தனிப்பட்ட பாவனைக்காகப் பயன்படுத்தியதன் மூலம் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையை மேல் நீதிமன்றம் நேற்று (23.05.2026) நிறைவு செய்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
இதனைத் தொடர்ந்து, குறித்த வழக்கின் தீர்ப்பை ஒத்திவைப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழு முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இலங்கை வர்த்தக சபையின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான சந்திரா ஜயரத்ன என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
அதிர்ஷ்டத்தின் கதவைத் திறக்கும் புதன் பெயர்ச்சி : இன்று முதல் உச்ச பலன்களை பெறும் 3 ராசிகள்! Manithan