உணவு போதாதெனின் இன்னும் கேட்கலாம்! சுரேஷ் சலேவுக்கு அமைச்சர் அறிவுரை..

CID - Sri Lanka Police Easter Attack Sri Lanka Nalinda Jayatissa Suresh Salley
By Benat Jun 24, 2026 07:04 AM GMT
Report

சுரேஷ் சலே நலமுடன் இருப்பதாகவும், அவருடைய உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை எனவும்  அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று(23.06.2026) இடம்பெற்ற, அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - யாழில் சிக்கிய பிரதான சூத்திரதாரி

இலங்கையை உலுக்கிய பெண்ணின் படுகொலை - யாழில் சிக்கிய பிரதான சூத்திரதாரி

சுரேஷ் சலே தடுத்து வைக்கப்பட்டுள்ள அறை

தொடர்ந்தும் தெரிவிக்கையில், 

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு என்று பிரத்தியேகமாக எந்தவொரு விசேட அறையும் உருவாக்கப்படவில்லை. எப்போதும் போன்று அங்குள்ள சாதாரண அறையில்தான் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உணவு போதாதெனின் இன்னும் கேட்கலாம்! சுரேஷ் சலேவுக்கு அமைச்சர் அறிவுரை.. | Suresh Sallay Main Culprit Of The Easter Attacks

சலே தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த விசாலமான அறையில், இதற்கு முன்னரும் கூட பலர் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். எனினும், அப்போது எவ்வித முறைப்பாடுகளும் முன்வைக்கப்படவில்லை. அத்துடன் இந்த அறைகள் 2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குப் பின்னர் புதிதாக உருவாக்கப்பட்டவை அல்ல.

தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவுக்கு உணவு வழங்கப்படாமல் இல்லை. மாறாக அவர் வாயினால் உணவு உண்ண மறுப்பு வெளியிட்டு வருகின்றமையே இங்கு பிரதான பிரச்சினை.

எனினும், தேசிய வைத்தியசாலையில் அவருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. அவர் தற்போது சுய நினைவுடன் நடமாடுவதுடன், அவருடைய தனிப்பட்ட வேலைகளை அவரே செய்து கொள்கின்றார். 

வாயினால் அன்றில் மூக்கில் இடப்பட்டுள்ள குழாய் ஊடாக அவருக்கான உணவு வழங்கப்பட்டு வருகின்றது.  எனவே அவருக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள்  சரியாக வழங்கப்பட்டு வருகின்றன. 

உயிருக்கு ஆபத்து இல்லை

அவரது வீட்டில் இருந்தும் அவருக்கு உணவு கொண்டு வந்து கொடுக்கப்படுவதுடன், அந்த அளவு போதாது எனின், இன்னும் அதிகமாக அவருடைய மனைவியிடம் கேட்டுப் பெற முடியும்.  அவ்வாறு கொண்டு வரப்படும் உணவினை அவரது மனைவியே அவருக்கு வழங்கி வருகின்றார். 

உணவு போதாதெனின் இன்னும் கேட்கலாம்! சுரேஷ் சலேவுக்கு அமைச்சர் அறிவுரை.. | Suresh Sallay Main Culprit Of The Easter Attacks

எனவே, அடிப்படையில் அவர் எந்தப் பிரச்சினையும் இன்றி இருப்பதால் அவரது உயிருக்கு எவ்வித ஆபத்தும் கிடையாது. 

அவர் உணவு உட்கொள்ளாமல் இருப்பதற்காக வெளியே மேடைகளை அமைத்தோ, கூட்டங்கள் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தியோ அல்லது பூஜைகளை நடத்தியோ எந்தவொரு பயனும் இல்லை.

வெளியே பதாகைகளைக் கட்டுவதை விடுத்து அவரது மனைவியும் பிள்ளைகளும் அவரிடம் சென்று உணவை உட்கொள்ளுமாறு கூறினால் இந்தப் பிரச்சினை உடனடியாக முடிவுக்கு வந்துவிடும்.

நாட்டில் இடம்பெற்ற மிகக் கொடூரமான கொலைச் சம்பவங்கள் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

எனவே, அந்த குற்றப் புலனாய்வு விசாரணை செயல்முறைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதே ஒரு பிரஜையின் பொறுப்பாகும். எனவே அதற்கமைய அவர் செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

இலங்கையில் அதிகரிக்கும் அபாய நிலை! உடன் நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை

இலங்கையில் அதிகரிக்கும் அபாய நிலை! உடன் நடவடிக்கை எடுக்குமாறு எச்சரிக்கை

கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

கைதினை தடுக்க அவசரமாக மனுத்தாக்கல் செய்த கோட்டாபய! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US