இலங்கை ரூபாவின் பெறுமதியில் பதிவான மாற்றம்
நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது, இன்று (23) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு மேலும் சரிவடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட நாணயமாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 304.10 ரூபாவாகவும், கொள்முதல் விலை 295.46 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
டொலர் மற்றும் யூரோவின் பெறுமதி
யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 348.32 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 334.93 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 405.95 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 391.69 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 196.48 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 186.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலரின் விற்பனை பெறுமதி 221.05 ரூபாவாகவும், கொள்முதல் பெறுமதி 212.15 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
