ஹோர்முஸ் நீரிணை முடக்கத்தால் உலகப் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது.
இதன்படி பிரெண்ட் மசகு எண்ணெய்யின் விலை நேற்று 3% அதிகரித்து, ஒரு பீப்பாய் 106 டொலரைத் தாண்டியது. நேற்றைய(16.3.2026) நிலவரப்படி இது 104.63 டொலராக உள்ளது.
போர் தொடங்கியதில் இருந்து உலக சந்தையில் எண்ணெய் விலை 40% க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது உலகப் பொருளாதார மந்தநிலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரம்ப் அழைப்பு
சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) படி, இது வரலாற்றிலேயே உலக எரிசக்தி விநியோகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய இடையூறாகும்.
போர் தொடங்குவதற்கு முன்பு நாளொன்றுக்கு சராசரியாக 138 கப்பல்கள் இந்த நீரிணையை கடந்தன. ஆனால் தற்போது நாளொன்றுக்கு 5 கப்பல்கள் மட்டுமே பயணிக்கின்றன.

பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதில் இருந்து இதுவரை குறைந்தது 16 வணிகக் கப்பல்கள் இந்த பிராந்தியத்தில் தாக்கப்பட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறக்க உதவுமாறு சீனா, ஜப்பான், பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈரான் மீது தாக்குதல்
ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் இந்த நீரிணைக்கு தங்கள் கப்பற்படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்துள்ளன.
தனது முன்மொழிவுக்கு நேர்மறையான பதில் கிடைக்காவிட்டால், நேட்டோ (NATO) அமைப்பு "மிக மோசமான" எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, ஈரான் இந்த நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு (1/5) இந்தப் பாதை வழியாகவே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனனி-சக்தியை காலி செய்ய தேவசகாயம் போட்ட கொடூரமான பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam