தரவலை மேல் பிரிவு தோட்டத்தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
உடைத்த பாலத்தினை செய்து தரும் வரை வேலைக்கு செல்ல மாட்டோம் என தரவலை மேல் பிரிவு தோட்டத்தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டமானது நேற்றையதினம்(16.3.2026) முன்னெடுக்கப்பட்டது.
ஹட்டன் நகரத்திற்கு முக்கியமாக குடிநீர் வழங்கும் சிங்கிமலை நீர்த்தேக்கம் மூலம் செயல்படுத்தப்படும் புதிய நீர்க்குழாய் திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்த நிறுவனத்துக்குச் சொந்தமான லாரி ஒன்று பயணித்தபோது, தரவல தோட்டத்தின் மேல்பகுதியில் அமைந்திருந்த பிரதான பாலம் இடிந்து விழுந்தது.
போராட்டம்
இந்த சம்பவம் நடந்து இன்று (16) ஆம் திகதியுடன் 9 நாட்கள் கடந்தும் இதுவரை பாலம் சீரமைக்கப்படாததால் எதிர்ப்பு தெரிவித்து தோட்ட தொழிலாளர்கள் பெரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இந்த மாதம் 07 ஆம் திகதி காலை, சிங்கிமலை நீர்த்தேக்கத்திலிருந்து ஹட்டன் நகரத்திற்கு நீரை கொண்டு செல்லும் நோக்கில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையினால் தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட திட்டத்திற்காக மணல் ஏற்றிச் சென்ற லொறி ஒன்று அந்த பாலம் வழியாகச் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
பாலம் இடிந்து விழுந்த உடனே அதை உடனடியாக பழுது பார்த்து தருவதாக அந்த தனியார் நிறுவனம் உறுதியளித்து லொறியை அங்கிருந்து அகற்றியிருந்தாலும், அதற்கு பின்னர் எந்தப் பராமரிப்பு பணியும் மேற்கொள்ளப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri