தலைமன்னார் - தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற பெண்

Mannar Sri Lanka India
By Ashik Apr 08, 2026 05:21 AM GMT
Report

இலங்கை தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல்முனை வரையிலான பாக் நீரிணை கடலை ஈஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி 11 மணி நேரம் 15 நிமிடங்களில் நீந்திச் சென்று சாதனை படைத்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த கமலேஷ் விட்டல்ராவ் பாண்டே மற்றும் அருணா கமலேஷ் பாண்டே தம்பதியினரின் 17 வயது மகளே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு - உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு - உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

இவர் பிறவியிலேயே முழுமையாக பார்வையற்றவராக இருந்தபோதிலும், தனது விடாமுயற்சி, துணிவு மற்றும் திறமையால் தேசிய அளவிலான பாரா ஒலிம்பிக் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

தலைமன்னாரில் இருந்து ஆரம்பம்

இதற்கு முன்னரும் கடலில் நீந்தி தனது திறனை நிரூபித்துள்ளார்.

தலைமன்னார் - தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற பெண் | Blind Woman Sets Record By Swimming

இந்நிலையில், நீந்துவதற்கு பார்வை குறைபாடு தடையல்ல என்பதை வலியுறுத்தும் நோக்கில், இலங்கையிலுள்ள தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலான பாக் நீரிணை கடலை நீந்திக் கடக்க இந்திய வெளியுறவுத்துறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தனர்.

அனுமதி கிடைத்ததைத் தொடர்ந்து, நேற்றுமுன்தினம் (06.04.2026) மதியம் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு படகுகளில் அவரது பெற்றோர், பயிற்சியாளர், மருத்துவர் மற்றும் கடற்றொழிலாளர்கள் உள்ளிட்ட 20 பேர் கொண்ட குழுவுடன் தலைமன்னாருக்கு புறப்பட்டுச் சென்றனர்.

நேற்று (07.04.2026) அதிகாலை 4.00 மணியளவில் தலைமன்னாரிலிருந்து ஈஸ்வரி நீந்தத் தொடங்கி, பிற்பகல் 3.15 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்பகுதியை வந்தடைந்தார்.

11 மணி நேரம் நீந்திய மாற்றுத்திறனாளி

தொடர்ந்து 11 மணி 15 நிமிடங்களில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தை நீந்தி கடந்துள்ளார். இதன் மூலம் பார்வைத்திறன் அற்ற மாற்றுத்திறனாளியாக கடலில் அதிக தூரமும் அதிக நேரமும் தனியாக நீந்திய சாதனையை ஈஸ்வரி படைத்துள்ளார்.

தலைமன்னார் - தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற பெண் | Blind Woman Sets Record By Swimming

தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் பாக் நீரிணை கடலை நீந்திக் கடந்த ஈஸ்வரிக்கு இந்திய கடலோர காவல் படையினரால் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதற்கு முன்னர் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக் நீரிணை கடற்பகுதியை 20.03.2022 அன்று மும்பையைச் சேர்ந்த ஆட்டிசம் பாதிக்கப்பட்ட சிறுமி ஜியா ராய் தனது 13 வயதில் நீந்திக் கடந்திருந்தார்.

மேலும், சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்த முழங்காலுக்கு கீழ் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான புவி ஆற்றல் என்பவர் கடந்த 05.10.2025 அன்று பாக் நீரிணையை நீந்திக் கடந்ததும் குறிப்பிடத்தக்கது.

தலைமன்னார் - தனுஷ்கோடி வரை நீந்தி சாதனை படைத்த பார்வையற்ற பெண் | Blind Woman Sets Record By Swimming

நாட்டில் நிலவும் மோசமான வானிலை - சிறுவர்கள், முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

நாட்டில் நிலவும் மோசமான வானிலை - சிறுவர்கள், முதியவர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

மீண்டும் சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம்! பிறந்தநாளை கொண்டாடிய அப்போதைய இராணுவ அதிகாரி

மீண்டும் சூடுபிடிக்கும் செம்மணி விவகாரம்! பிறந்தநாளை கொண்டாடிய அப்போதைய இராணுவ அதிகாரி


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US