ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு - உலக சந்தையில் எண்ணெய் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் இரண்டு வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதை தொடர்ந்து, உலக சந்தையில் எண்ணெய் விலையில் மாற்றம் பதிவாகியுள்ளது.
கச்சா எண்ணெயின் விலை
இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 95.60 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது.
அதன்படி, ஒரு பெரல் WTI கச்சா எண்ணெயின் விலை 95.47 அமெரிக்க டொலராகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஒரு பெரல் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை 13.67 அமெரிக்க டொலர்கள் குறைந்துள்ளதாக சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.சதவீத அடிப்படையில் இது 12.51 சதவிகிதக் குறைவாகும்.
சர்வதேச சந்தை அறிக்கை
ஒரு பெரல் அமெரிக்க கச்சா எண்ணெயின் விலையும் 15.38 அமெரிக்க டொலர்கள் குறைந்து 97.57 அமெரிக்க டொலர்களாக உள்ளது.
சர்வதேச சந்தை அறிக்கைகளின்படி, இது சதவிகித அடிப்படையில் 13.62 சதவிகிதக் குறைவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.