லாப்ஸ் சமையல் எரிவாயுவிற்காக காத்திருந்த மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல்
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, இன்று முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு லாப்ஸ் எரிவாயுவை எந்தவிதப் தடையுமின்றி விநியோகிக்கவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
வர்த்தக அமைச்சரின் அறிவுறுத்தல்களுக்கமைய, அதற்காக சட்ட நடவடிக்கைகள் குறித்து அந்நிறுவனத்திற்கு தெரிவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
7,000 மெட்ரிக் டன் லாப்ஸ் எரிவாயுவை ஏற்றிச் வந்த கப்பல் ஒன்று கடந்த 6 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தடைந்ததாக லாக்ப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
லாப்ஸ் எரிவாயு
இன்று முதல் லாப்ஸ் எரிவாயு வாடிக்கையாளர்களுக்கு உரிய எரிவாயு இருப்புகளை விநியோகிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கிடையில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தொடர்ச்சியான சோதனைகளும் விசாரணைகளும் தொடங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் ஆணையத்தின் இயக்குநர் அசெல பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 5 நாட்கள் முன்
இந்த 6 அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. அலட்சியம் செய்யாதீர்கள் News Lankasri
43 வயதில் செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை கவரும் நடிகை விஜயலட்சுமி... வீடியோவுடன் இதோ Cineulagam