இலங்கையை உலுக்கிய நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்..! சொல்லப்படாத தகவல்கள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற கலவரத்தில் 7 சிறை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள விடயமானது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இந்த சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்திய கடற்றொழிலாளர்கள் மற்றும் வெளிநாட்டுப் பெண்மணி ஆகியோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
தற்போதைய நிலையில், இந்த சிறைச்சாலையில் பெரும்பாலும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களே தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சிறையினுள் நடைபெற்ற போதைப்பொருள் வர்த்தகத்தை முறியடிக்கச் சென்ற 'மந்த போலீஸ்' எனப்படும் சிறப்புப் படையினருக்கும் கைதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலே இந்த பாரிய கலவரத்திற்கு முக்கிய காரணமாக அமைந்ததாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த காலங்களில் இலங்கையின் சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட கொடூர வரலாறுகள் (1983 வெலிக்கடை சிறைச்சாலை, 2000 பிந்துனுவெவ படுகொலை) குறித்தும், குறிப்பாக குட்டிமணி, ஜெகன் மற்றும் தங்கத்துரை ஆகியோரின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட கோர சம்பவம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருகின்றது.
இலங்கையின் சிறைச்சாலை நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகள் மற்றும் அங்கு கைதிகளுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழல் குறித்தும் உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி ஆழமான விமர்சனங்களை முன்வைக்கின்றது....
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam