பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் திடீர் மரணம் குறித்து வெளியான தகவல்

Sri Lanka Police Ampara Hospitals in Sri Lanka Crime
By Farook Sihan Jul 07, 2026 09:40 AM GMT
Report

போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 26 வயதுடைய இளைஞர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் நிந்தவூர் 23 அட்டப்பளம் சகாத் கிராமத்தைச் சேர்ந்த 26 வயதுடைய அப்துல் வாஹிது வஜீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு சிறை வாயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்..! சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்

நீர்கொழும்பு சிறை வாயிலில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்..! சற்றுமுன்னர் நாடாளுமன்றில் வெளியிடப்பட்ட தகவல்

விசேட சோதனையில் நால்வர் கைது

கடந்த ஞாயிற்றுக்கிழமை(05.07.2026) மாலை அட்டப்பளம் பகுதியில் நிந்தவூர் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது, அப்பகுதிக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்த 'ஜெமில்' என்ற நபர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் திடீர் மரணம் குறித்து வெளியான தகவல் | Sudden Death Young Man In Ninthavur Police Custody

இதன்போது ஜெமிலிடமிருந்து 2 கிராம் 700 மில்லிகிராம் ஹெரோயினும், மற்ற இருவரிடமிருந்து தலா 60 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து கிடைத்த மேலதிக தகவலின் பேரில், மற்றொரு வீட்டில் சோதனை நடத்திய பொலிஸார், 3 கிராம் 100 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருளுடன் நான்காவது சந்தேகநபரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் நிந்தவூர் பொலிஸ் நிலையத்தின் சிறைக் கூண்டில் அடைக்கப்பட்டிருந்தனர்.

சம்பவ தினமான திங்கட்கிழமை (6) அதிகாலை 3.30 மணியளவில் சந்தேக நபர்களில் ஒருவரான வஜீத் என்பவர் வழமைக்கு மாறான முறையில் நடந்து கொண்டுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரை நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தனர். எனினும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் காலை 6.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

பக்கெட்டை விழுங்கியதாக குற்றச்சாட்டு

உயிரிழந்த வஜீத் என்ற சந்தேக நபர் பொலிஸ் காவலில் இருந்தபோது தான் மறைத்து வைத்திருந்த 'ஐஸ்' போதைப்பொருள் அடங்கிய பக்கெட்டை விழுங்கிவிட்டதாக அவருடன் கைவிலங்கிடப்பட்டிருந்த மற்றொரு கைதி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் அதனை விழுங்கியதாகவே கூறப்படுகின்றது.

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞனின் திடீர் மரணம் குறித்து வெளியான தகவல் | Sudden Death Young Man In Ninthavur Police Custody

உயிரிழந்த இளைஞரின் சடலம் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அம்பாறை பொது மருத்துவமனையின் தடயவியல் நிபுணரால் இன்று (07) பிரேதப் பரிசோதனை நடத்தப்பட உள்ளது. இதேவேளை, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏனைய மூன்று சந்தேகநபர்களும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன் போது சந்தேக நபர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்டீன் முஹம்மட் சர்ஜுன் உத்தரவிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : கோட்டாபய ராஜபக்ச வழக்கில் புதிய திருப்பம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விசாரணை : கோட்டாபய ராஜபக்ச வழக்கில் புதிய திருப்பம்

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணி..! அவசரமாக இடமாற்றப்படும் முக்கிய கைதி

நீர்கொழும்பு சிறைச்சாலை பதற்றத்தின் பின்னணி..! அவசரமாக இடமாற்றப்படும் முக்கிய கைதி

7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, சங்குவேலி

27 Oct, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
நன்றி நவிலல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
நன்றி நவிலல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
நன்றி நவிலல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சென்னை, India

25 Oct, 2026
நன்றி நவிலல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US