கறுப்பு ஜூலை தினத்தில் யாழ். வந்த தென்னிலங்கை அமைச்சரின் மோசமான செயல்
தமிழர்களின் கறை படிந்த நாளான ஜூலை 23ஆம் திகதியான நேற்று தென்இலங்கையில் இருந்து புகையிரதம் மூலம் சகோதரத்துவம் எனக் கூறி வந்த அமைச்சர் யாழில் நடனம் ஆடுவது போன்ற காட்சிகளை தனது முகநூலில் பதிவேற்றியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
இன்றைய தினம் ஜூலை 23 ல் சகோதரத்துவ நாளாக தேசிய மக்கள் சக்தியின் இளைஞர் விவகார பிரதி அமைச்சர் எரங்க குணசேகரா தலைமையில் கொழும்பிலிருந்து புகையிரதம் மூலம் பெரும்பான்மை இன மக்கள் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டனர்.
ஒற்றுமையாய் வாழ்வோம் சகோதராய் வாழ்வோம் என கூறி புகையிரத மூலம் அழைத்து வரப்பட்ட நபர்களுடன் யாழ். நகரப் பகுதி ஒன்றில் அமைச்சர் குத்தாட்டம் போடுவது தமிழ் மக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக அமையும் என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
ஜூலை 23 தமிழர்கள் வாழ்வில் அழிக்க முடியாத கறை படிந்த நாளாக பார்க்கப்படுகின்ற நிலையில் சகோதரத்துவம் என கூறி மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாது குத்தாட்டம் போடுவது ஏற்புடையதல்ல என பல்வேறு தரப்பினரும் கருத்துரைத்து வருகின்றனர்.
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri
யாரிந்த பீற்றர் எல்பர்ஸ்... IndiGo தலைமை நிர்வாக அதிகாரியின் சம்பளம், சொத்து மதிப்பு எவ்வளவு News Lankasri