வைத்திய நிபுணர் பற்றாக்குறை: கராப்பிட்டிய வைத்தியசாலையில் பெரும் சிக்கல்
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவின் வைத்திய நிபுணர் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்களை விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தைகளுக்கான இதயத்தினுள் வடிகுழாய் உட்செலுத்தும் சிகிச்சை பிரிவில் பணியாற்றிய வைத்திய நிபுணர்கள் இருவரும் சேவையில் இருந்து விலகியுள்ளதாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் எச்.டி.யு.ரங்க குறிப்பிட்டுள்ளார்.
சத்திரசிகிச்சைக்கான நீண்ட காத்திருப்பு
இதற்கமைய கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் இருந்து சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் விசேட சிகிச்சைக்காக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், போதிய சத்திரசிகிச்சை அறை வசதிகள் மற்றும் அதிதீவிர சிகிச்சை வசதிகள் இல்லாத காரணத்தினால் இதய சத்திரசிகிச்சைக்கான நீண்ட காத்திருப்பு பட்டியல் உருவாகியுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |