அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஜோ பைடன் திடீர் முடிவு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளதோடு புதிய வேட்பாளராக கமலா ஹரிஸை (Kamala Harris) ஆமோதித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு (Donald Trump) எதிரான விவாதத்தில் பைடனின் விவாதத் திறன் மிகவும் குறைவாக இருந்தது.
அதனைத் தொடர்ந்து, அவரை தேர்தல் போட்டியிலிருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனநாயகக் கட்சியின் (Democratic Party) மூத்த தலைமைகள் அழுத்தம் பிரயோகித்திருந்தன.
சிறந்த முடிவு
இதனையடுத்தே, பைடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
My fellow Democrats, I have decided not to accept the nomination and to focus all my energies on my duties as President for the remainder of my term. My very first decision as the party nominee in 2020 was to pick Kamala Harris as my Vice President. And it’s been the best… pic.twitter.com/x8DnvuImJV
— Joe Biden (@JoeBiden) July 21, 2024
மேலும், 2020ஆம் ஆண்டு எனது முதல் முடிவு கமலா ஹரிஸை துணைத் தலைவராக தேர்ந்தெடுத்தது தான் எனவும் இதுவே நான் எடுத்த சிறந்த முடிவு எனவும் அவர் தனது 'X' தளத்தில் இட்ட பதிவில் கூறியுள்ளார்.
அத்துடன், தேர்தல் வேட்பாளராக கமலா ஹரிஸ் களமிறங்க தனது முழு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனநாயக ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு ட்ரம்ப்பை தோற்கடிக்க வேண்டிய நேரமிது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |