பைடனுக்கு பதிலாக ஜனநாயக கட்சியின் வேட்பாளர்: வெளியான சாத்தியக்கூறு
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தேர்தல் போட்டியிலிருந்து விலகும் பட்சத்தில் துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் (Kamala Harris) வேட்பாளராக களமிறங்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலிலிருந்து ஜோ பைடன் விலக வேண்டும் என ஜனநாயகக் கட்சியின் உயர் மட்ட அதிகாரிகளான அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஓபாமா (Barack Obama) மற்றும் சபாநாயகர் ஆகியோர் விரும்புவதாக கூறப்படுகின்றது.
இந்நிலையிலேயே, கமலா ஹரிஸ் புதிய வேட்பாளராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சாத்தியமான வேட்பாளர்களின் பட்டியல்
கமலா ஹரிஸ், ஜோ பைடன் உடனான கூட்டணியில் நம்பிக்கையாக செயற்பட்டுள்ளதோடு பைடனின் விவாதத் திறனையும் ஆதரித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இடையில் நடைபெற்ற விவாதத்தில், பைடனின் ஆரம்பம் வேகமானதாக இல்லை என்றாலும் அவரின் பதில்கள் ட்ரம்ப்பின் பதில்களை விட நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருந்தது என கமலா ஹரிஸ் கூறியுள்ளார்.
அத்துடன், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை ஒருமுறை தோற்கடித்த நாங்கள், மீண்டும் ஒரு முறையும் தோற்கடிப்போம் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அதேவேளை, மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மர், கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம், போக்குவரத்து செயலாளர் பீட் புட்டிகீக், பென்சில்வேனியா ஆளுநர் ஜோஷ் ஷாபிரோ மற்றும் இல்லினாய்ஸ் ஆளுநர் ஜேபி பிரிட்ஸ்கர் ஆகியோரும் சாத்தியமான வேட்பாளர்களின் பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
