கல்வி புரட்சி மூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம்: பாரத் அருள்சாமி

Kandy Sri Lanka Politician Sri Lanka
By Thirumal Aug 04, 2024 01:16 PM GMT
Report

கல்வி புரட்சி மூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என உறுதியாக நம்புவதாக பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்துள்ளார்.

கண்டி, மஹியாவ கலைமகள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உட்கட்டமைப்பு கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

கல்வி புரட்சி

அவர் மேலும் கூறுகையில்,

“மஹியாவ கலைமகள் வித்தியாலயமானது வரலாற்று சிறப்புமிக்க பாடசாலையாகும். கண்டி நகர எல்லைக்குள் உள்ள மூன்று தமிழ்ப் பாடசாலைகளில் கலைமகள் வித்தியாலயத்துக்கென தனி சிறப்பு உள்ளது.

இக்கல்லூரியின் அதிபர், எனது ஆசான் சபாபதி, பலருக்கு கல்வி கண் திறந்தவர். மிகவும் சிறப்பாக கல்வி அமுதூட்டி பல நற்பிரஜைகளை சமூகமயப்படுத்தியவர், எனது வாழ்விலும் அவர் மறக்க முடியாத நபர்.

இன்று நான் சிறந்த நிலையில் இருப்பதற்கு அவர் கற்று தந்த கணித பாடமும் பெரிதும் கை கொடுத்தது. 

கல்வி புரட்சி மூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம்: பாரத் அருள்சாமி | Bharat Arulsamy Speech At Kandy

அவரின் வழிகாட்டதால்தான் பரீட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறமுடிந்தது.

மிகவும் தலைசிறந்த ஆசானான அவர், ஒரு அதிபராக சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, இப்பாடசாலையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றார். 

பாடசாலையின் சாதாரணதரம் மற்றும் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் திருப்தியடையக்கூடிய வகையில் உள்ளது. 

பாடசாலை நிர்வாகமும் சிறப்பாக நடைபெறுகின்றது. கலை நிகழ்வுகள், வலய, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்கேற்று திறமையை மாணவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர்.

அதேபோல இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை சமூகத்துக்கு வழங்கிவருகின்றனர்.

கல்வி புரட்சி மூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம்: பாரத் அருள்சாமி | Bharat Arulsamy Speech At Kandy

இத்திட்டத்துக்குரிய நிதி உதவியை அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம் நாம் வழங்கி இருந்தாலும் பழைய மாணவர்களின் அர்ப்பணிப்பதால் அந்த நிதிக்கும் மேலதிகமாக நிதி திரட்டி சேவைகளை செய்து, திட்டத்தை பூரணப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் மலையகத்தில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி பல திட்டங்களை செயல்படுத்திவருகின்றோம். 

இந்திய அரசும் எமக்குரிய உதவிகளை வழங்கிவருகின்றது. அறிவெழுச்சி வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறும் என்பதுடன் இலங்கைக்கான இந்திய தூதுவரும் இந்நிகழ்வில் பங்கேற்பார்.

கல்வி புரட்சி மூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம்: பாரத் அருள்சாமி | Bharat Arulsamy Speech At Kandy

மத்திய மாகாணசபை ஊடாக மலையக கல்வி மேம்பாட்டுக்கு எனது தந்தை அமரர்அருள்சாமி அவர்கள் வழங்கிய சேவைகளையும் மறந்துவிடமுடியாது. 

கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்புகின்றோம்.

அதற்காகவே கல்விக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கிவருகின்றோம். மஹியாவ கலைமகள் கல்லூரிக்கு மேலும் நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம்: அமெரிக்கா - பிரித்தானியா அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

மத்திய கிழக்கில் போர் மூளும் அபாயம்: அமெரிக்கா - பிரித்தானியா அரசாங்கங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கை

ஆயிரம் ரூபாவிற்கு சென்ற அமெரிக்க டொலரின் பெறுமதி! பதிலை கோரும் அமைச்சர்

ஆயிரம் ரூபாவிற்கு சென்ற அமெரிக்க டொலரின் பெறுமதி! பதிலை கோரும் அமைச்சர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US