ஆயிரம் ரூபாவிற்கு சென்ற அமெரிக்க டொலரின் பெறுமதி! பதிலை கோரும் அமைச்சர்
டொலரின் பெறுமதியை 1000 ரூபாவிலிருந்து 300 ரூபா வரை குறைத்தது யார் என்ற கேள்விக்கான பதிலை எதிர்க்கட்சிகள் வழங்க வேண்டும் என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புத் துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga) தெரிவித்துள்ளார்.
பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொருளாதார நெருக்கடியில் இருந்து தீர்வு
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த இரண்டு வருடங்களில் கடன் மறுசீரமைப்பு மற்றும் எச்சரிக்கைகளை விடுத்ததைத் தவிர ஜனாதிபதி எதனையும் செய்யவில்லை என்று எதிர்க்கட்சி குற்றம் சாட்டுகின்றன.
எரிபொருள் வரிசைகள், எரிவாயு வரிசைகள், மருந்துத் தட்டுப்பாடு, உரத் தட்டுப்பாடு ஆகியவற்றை நீக்கியது யார்? மின்வெட்டை நிறுத்தி டொலரின் பெறுமதியை 1000 ரூபாவிலிருந்து 300 ரூபா வரை குறைத்தது யார் என்ற கேள்விக்கான பதிலை அவர்கள் முதலில் கூற வேண்டும்.
நமது நாடு மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தது. எங்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை என்று ஒப்புக்கொண்டபோது, நாங்கள் உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டோம். உலகமே நம்முடன் பழக அஞ்சியது.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான உலகளாவிய ஒப்பந்தத்திற்குப் பிறகு எங்களுக்கு சர்வதேச வரவேற்பு கிடைத்தது. வீட்டை இழக்கும் மனிதனைப் போலவே நாங்களும் விளிம்பில் இருந்தோம்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உருவாக்கிய சூழலுக்கு நன்றி செலுத்தும் வகையில் இன்று எவரும் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |