போதைப்பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் குறித்து எச்சரிக்கை
போதைப்பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் மீட்பு
போதைப்பொருள் உள்ளடங்கிய சுமார் நாற்பதாயிரம் லொசிஞ்சர் மற்றும் லொலிபொப் என்பன மீட்கப்பட்டுள்ளன.
சிறுவர்களுக்கு விற்பனை செய்யும் நோக்கில் இந்த இனிப்பு பண்டங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் பாணந்துறை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெற்றோர் முறைப்பாடு
பாணந்துறை தனியார் பாடசாலை ஒன்றுக்கு முன்பாக காணப்படும் கடையொன்றில் இந்த இனிப்பு பண்டங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் கலந்த இனிப்பு பண்டங்கள் குறித்து பெற்றோர், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.