ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்! போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து 30 பேருக்கு எதிராக வழக்கு(Video)

Batticaloa M A Sumanthiran Ranil Wickremesinghe SL Protest
By Kumar Nov 17, 2023 12:39 PM GMT
Report

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடாத்தியதாகவும் வீதியை மறித்ததாகவும் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் ஊடகவியலாளர்கள் இருவர் உட்பட 30பேருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 24ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 08ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வருகை தந்திருந்தார்.

இந்த நிலையில் அவரின் வருகையின்போது தமது கோரிக்கையினை வலியுறுத்தி கால்நடை பண்ணையாளர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள், சிவில் சமூகப்பிரதிகள் அமைதியான முறையில் போராட்டம் நடாத்தினார்கள்.

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்! வியக்க வைக்கும் முன்னாள் போராளியின் மகனது சாதனை (Photos)

வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகள்! வியக்க வைக்கும் முன்னாள் போராளியின் மகனது சாதனை (Photos)

30 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல்

இதன்போது பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி பெருமளவு பொலிஸார் மற்றும் கலகமடக்கும் பொலிஸார் வரவழைக்கப்பட்டு அப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் காரணமாக போராட்டம் முன்னெடுக்கப்பட்ட பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது.

எனினும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று நிறைவடைந்த நிலையில் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என தெரிவித்து 30பேருக்கு எதிரான வழக்கினை ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்தனர்.

ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயம்! போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து 30 பேருக்கு எதிராக வழக்கு(Video) | Batticaloa Protest Journalists

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொலிஸ் நிலையங்கள் ஊடாக பல்வேறு இடங்களை சேர்ந்தவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதில் போராட்டத்தில் கலந்துகொள்ளாதவர்கள்,குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் என 30 பேருக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்றைய தினம் ஏறாவூர்ப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாக் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது போராட்டக்காரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சிரேஸ்ட சட்டத்தரணி பே.பிரேம்நாத், சட்டத்தரணிகளான சி.ஜெகன்,மயூரி ஜனகன் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இதன்போது அடிப்படை மனித உரிமைகளை மீறும் வகையிலும் நீதிமன்றத்தினை தவறான முறையில் கொண்டுசெல்லும் வகையிலும் பொலிஸார் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளதாகவும் ஊடகவியலாளர்கள் தமது கடமையினைச் செய்யச் சென்றபோது அவர்களுக்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்துள்ளதன் மூலம் அரசாங்கத்தற்கு எதிரான போராட்டங்கள் குறித்து செய்தி சேகரிப்பதற்கு செல்லக்கூடாது என்பதற்காக இவை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் மன்றில் கவனத்திற்கு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் கொண்டுவந்தார்.

பரதநாட்டியம் தொடர்பில் மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்து: நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்பு(Video)

பரதநாட்டியம் தொடர்பில் மௌலவியின் சர்ச்சைக்குரிய கருத்து: நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ள எதிர்ப்பு(Video)

குறித்த வழக்கினை தள்ளுபடி செய்யவேண்டும் எனவும் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.

தாங்கள் இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை சமர்ப்பிக்கவுள்ளதனால் தங்களுக்கு திகதியொன்றை தருமாறு பொலிஸார் கோரிய நிலையில் இருவாதப்பிரதிவாதங்களின் அடிப்படையில் குறித்த வழக்கானது எதிர்வரும் ஜனவரி 24ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றில் முன்னிலையானவர்கள் பிணை இல்லாமல் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகாதவருக்கு மட்டும் அழைப்பாணை  வழங்க பணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி ம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் : யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவியின் வரலாற்று சாதனை (Video)

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் : யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவியின் வரலாற்று சாதனை (Video)

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

20 Jun, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, Saudi Arabia, ஜேர்மனி, Germany, Brampton, Canada

20 Jul, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
மரண அறிவித்தல்

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வசாவிளான், Jaffna, குப்பிளான்

21 Jul, 2015
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பேர்ண், Switzerland

21 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US