புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் : யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவியின் வரலாற்று சாதனை (Video)
யாழ். மாவட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்று யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி ஒருவர் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
ஜெராட் அமல்ராஜ் வனிஷ்கா என்ற மாணவியே இவ்வாறு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளதாக யாழ்ப்பாண இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் சிவந்தினி வாகீசன் தெரிவித்துள்ளார்.
குறித்த மாணவி 2023 ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 196 புள்ளிகளை பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு எமது கல்லூரியில் இருந்து 110 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 35 மாணவர்கள் பரீட்சையில் சித்தி அடைந்து கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
வரலாற்று சாதனை
அதிலும் வரலாற்றில் முதன்முதலாக யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிக புள்ளிகளை பெற்று எங்கள் பாடசாலை மாணவி பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்ற மாணவி கருத்து தெரிவிக்கையில், தன்னை போன்று எதிர்காலத்தில் மாணவர்கள் அதிக புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமையை சேர்க்க வேண்டும் எனவும் எதிர்காலத்தில் தான் விஞ்ஞானியாக வந்து இலங்கைக்கு பெருமை சேர்ப்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
