கூலி தொழிலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்
அம்பாறையில் மின்சார சபைக்கு சார்பாக மரக் கிளைகளை வெட்டுகின்ற கூலி தொழிலாளர்கள் நால்வர் தாக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றையதினம் (31.12.2023) இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் சம்பவம்
வைத்தியசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றின் அருகில் மின்சார கம்பிகளுக்கு இடையூறாக அமைந்த மரம் ஒன்றின் கிளைகளை வெட்டி கொண்டிருந்தபோதே தாக்குதல் இடம் பெற்றதாக கூறப்படுகின்றது.
வாகனத்தில் ஆட்களை அழைத்து வந்த நபர்களால் சரமாரியாக தாக்கப்பட்டதாக வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மூவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நான்காவது தொழிலாளர் சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் தாக்குதலை நடத்தியவர் இப்பிரதேசத்தை சேர்ந்த பிரபல வர்த்தகர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 3 மணி நேரம் முன்

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri
