இந்தியாவின் திருத்தலங்களுக்கு யாத்திரைகளை மேற்கொள்ளவுள்ள இலங்கையர்களுக்கான அறிவித்தல்
சபரிமலை மற்றும் புத்தகாயா யாத்திரைகளை மேற்கொள்ளும் இலங்கையர்கள் உரிய சுகாதார வழிமுறைகளை பின்பற்றுவது அவசியமென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவின் விசேட மருத்துவர் சிந்தன பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், இந்தியாவின் பல்வேறு திருத்தலங்களுக்கும் யாத்திரை செல்ல இருப்பவர்கள் முகக்கவசம் அணியுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்போது, வெளிநாட்டுப் பயணங்களின் போது சுகவீனம் ஏற்படுமானால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்வது முக்கியம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பரிசோதனை நடவடிக்கைகள்
இதேவேளை, நாட்டில் மீண்டும் கோவிட் திரிபு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதால், நாடளாவிய ரீதியில் பல்வேறு பிரதேசங்களில் வசிப்பவர்களிடம் இருந்தும் மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
அவ்வாறு பெறப்படும் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் வைரஸ் நோய் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ரோஹித முதுகல தெரிவித்துள்ளார்.
கோவிட் திரிபு, தற்போது தடுமல் போன்ற சிறு நோய்களாகவே ஏற்படுகின்ற காரணத்தால் பரிசோதனை மேற்கொள்வதற்கான அவசியமில்லை எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |