வீதியோரத்தில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவர்களுக்கு நேர்ந்த பரிதாபம்
சிலாபம் - குருநாகல் வீதியின் மேல் கொஸ்வத்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (01.02.2026) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சிலாபம் நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்று, வீதியோரத்தில் நடந்து சென்ற இரண்டு சிறுவர்கள் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இரு சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
விபத்தில் படுகாயமடைந்த இரண்டு சிறுவர்களும் உடனடியாக சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவர்களில் ஹல்மில்லேவ பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
மற்றைய சிறுவன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பாரவூர்தியின் சாரதி பிங்கிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri