இ.தொ.கவிலிருந்து விலகி மனோ கணேசனுடன் இணைந்த பாரத் அருள்சாமி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்னாள் உப தலைவர் பாரத் அருள்சாமி தமிழ் முற்போக்கு கூட்டணியில் இணைந்துள்ளார்.
குறித்த நிகழ்வு இன்று (08.10.2024) கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவராக பதவி வகித்த பாரத் அருள்சாமி, நேற்றையதினம் அவரது பதிவியிலிருந்து விலகினார்.
பதவி விலகல்
அத்துடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவர் விலகுவதாக அறிவித்திருந்தார்.
நாட்டினை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தங்களது சுயநல அரசியலுக்காக கண்டி மக்களை அடகு வைத்த உறுப்பினர்களோடு இணைந்து தாம் போட்டியிட தயார் இல்லை என அவர் இந்த முடிவை எடுத்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழக அரசின் சிறந்த சின்னத்திரை கலைஞர்களுக்கான விருது (2014-2022)... யார் யாருக்கு விருது, முழு விவரம் Cineulagam
சக்திக்கு வந்த ஷாக்கிங் தகவல், விசாலாட்சியை சுட துணிந்த கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri