இரண்டாவது தோல்வியை தழுவிய பங்களாதேஸ் கிரிக்கெட் அணி
சர்வதேச கிரிக்கட் சம்மேளனத்தின் செம்பியன்ஸ் கிண்ண போட்டிகளின் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஸ்(Bangladesh )அணியை, நியூஸிலாந்து அணி, 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.
பாகிஸ்தானில் நடைபெற்ற இந்தப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஸ் அணி, 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 239 ஓட்டங்களை பெற்றது.
பங்களாதேஸ் கிரிக்கெட் அணி
நஜிமுல் ஹொசைன் சாண்டோ 77 ஓட்டங்களை பெற்றார் நியூஸிலாந்தின் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
இதனையடுத்து துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 240 ஒட்டங்களை பெற்று போட்டியில் வெற்றியீட்டியது.
இதில் ரச்சின் ரவீந்திரா(Rachin Ravindra) 112 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இதேவேளை இன்று அவுஸ்திரேலிய அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான போட்டி பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
