திலிணி பிரியமாலிக்கு பிணை வழங்கி உத்தரவு
ஹோமாகம பொலிஸாரினால் இன்று(28) காலை கைது செய்யப்பட்ட பிரபல வர்த்தகர் திலிணி பிரியமாலிக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஹோமாகம நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட அறிவித்தல் ஒன்றை கையளிக்க சென்றிருந்த நீதிமன்ற ஊழியருக்கு கடமையை செய்ய விடாமல் தடுத்து அச்சுறுத்தல் விடுத்ததாக திலிணி பிரியமாலி குறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டிருந்தது.
அதனையடுத்து, திலிணிக்கு பொலிஸில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு கடந்த 14ஆம் திகதி ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
சரீரப் பிணைகள்
அதன் பிரகாரம் இன்று காலை பொலிஸ் நிலையம் வருகை தந்திருந்த திலிணி பிரியமாலி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
எனினும், இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுவித்து ஹோமாகம மஜிஸ்திரேட் ரஜிந்தா விக்ரமசூரிய உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அட சிறகடிக்க ஆசை சீரியல் புகழ் கோமதி ப்ரியாவா இது... பல வருடங்கள் முன் எப்படி உள்ளார் பாருங்க, Unseen போட்டோ Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri
