மீண்டும் விசாரணை வலைக்குள் சிக்கப்போகும் ஹேமசிறி - பூஜித் ஜெயசுந்தர
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்காக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர ஆகியோருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
நாமல் பலல்லே மற்றும் முகமது இர்ஷதீன் ஆகிய மூவர் கொண்ட கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரநர்கள் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கு இன்று (28) விசாரணைக்கு எடுத்தக்கொள்ளப்பட்டபோது, எதிர்வரும் 18 ம் திகதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல்
வழக்கை விசாரித்த மூன்று பேர் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வின் உறுப்பினரான நீதியரசர் ஆதித்யா படபெந்திகே, தற்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளதால், புதிய நீதியரசர்கள் அமர்வை நியமிக்குமாறு புதிய தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தீலிபா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அதன்படி, புதிய அமர்வு நியமிக்கப்படும் வரை இந்த வழக்கின் விசாரணைக்கு மற்றொரு திகதியை வழங்குமாறு சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தை கோரினார்.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதிபதிகள் அமர்வு, வழக்கை செப்டம்பர் 18 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது.





சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri

இனி 12 மணி நேரத்திற்கு பதில் 2 மணி நேரம் தான்.., ஜப்பானின் அதிவேக புல்லட் ரயில் இந்தியாவில் அறிமுகம் News Lankasri

யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
