கஜ்ஜா கொலையின் பின்னணி தொடர்பில் மனம்பேரி வெளியிட்ட தகவல்
தென் மாகாணத்தில் மித்தெனிய கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் உட்பட பல பாதாள உலகக் கொலைகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவுக்குச் சொந்தமான ஆயுதங்கள் தொடர்பில் காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி விசாரணையின் போது ஒப்புக்கொண்டுள்ளார்.
மதுகமவிலிருந்து மித்தெனிய வரை எடுத்துச் சென்று பாதாள உலகக் கொலையாளிகளுக்கு குறித்த ஆயுதங்களை வழங்கியதாக மனம்பேரி கூறியுள்ளார்.
"பக்கோ சமன்" என்ற பாதாள உலகத் தலைவரின் அறிவுறுத்தல்கள் மற்றும் ஒருங்கிணைப்பின் கீழ் இந்த ஆயுதத் தொகை விநியோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதற்காக தனக்கு எந்தப் பணமும் கிடைக்கவில்லை என்றும் சந்தேக நபர் கூறியுள்ளார்.
மித்தெனிய கஜ்ஜா
இதன்படி பாதாள உலக தரப்புக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களில் 3 T-56 துப்பாக்கிகள், 5 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு பெரிய அளவிலான தோட்டாக்கள் இருந்ததாகவும் சந்தேக நபர் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர், தான் கொடுத்த T-56 துப்பாக்கியால் மித்தெனியவில் 'கஜ்ஜா'வையும் அவரது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்யப்பட்டனர் என கூறியுள்ளார்.
இந்த ஆயுதங்களை கொண்டு செல்ல சம்பத் மனம்பேரி தனது அரசியல் அதிகாரத்தையும் பாதுகாப்புப் படைகளில் உள்ள தொடர்புகளையும் பயன்படுத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பத் மனம்பேரியால் எடுத்துச் செல்லப்பட்ட ஆயுதங்கள் இராணுவத்திலிருந்து திருடப்பட்டவையான இருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பொலிஸார் சந்தேகம்
தற்போது காவலில் உள்ள லெப்டினன்ட் கேணல் மற்றும் பிரதேச பொலிஸ் சார்ஜென்ட் ஆகியோர் பல ஆயுதங்களை பாதாள உலகத்திற்கு விற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த ஆயுதங்களும் அவர்களால் விற்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பத் மனம்பேரி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் இருந்து பேலியகொட குற்றப்பிரிவு உதவி பொலிஸ் அத்தியட்சகர்களான ரோஹன் ஒலுகல மற்றும் லிண்டன் சில்வா ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் இந்தத் தகவல் தெரியவந்ததாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



