என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விஜய் பகிரங்க சவால்
முதலமைச்சரே உங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் இருக்குமாக இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் தனது எக்ஸ் வலைத்தளத்தில் சற்றுமுன் அவர் காணொளியொன்றை பதிவேற்றியுள்ளார்.
அந்த காணொளியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மை வெளிவரும்
அவர் மேலும் கூறுகையில், சுமார் 5 மாவட்டங்களுக்கு நாம் பிரச்சார பணிகளுக்காக சென்றிருந்தோம். இருப்பினும் எந்த இடத்திலும் இவ்வாறானதொரு அசம்பாவிதம் இடம்பெறவில்லை. இப்படியிருக்கும் போது கரூரில் மட்டும் ஏன் இப்படி நடக்க வேண்டும்?
எல்லா உண்மைகளும் மக்களுக்கு தெரியும். சீக்கிரம் எல்லா உண்மைகளும் வெளிவரும். எமக்கு தரப்பட்ட இடத்திற்கு நாம் சென்று அங்கு பிரச்சாரத்தை செய்கிறோம். அதை தாண்டி எந்தவொரு தவறையும் நாங்கள் செய்யவில்லை.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
இருந்தாலும் எமது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், தோழர்கள், மற்றும் சமூக ஊடகங்களை சேர்ந்த தோழர்கள் மீது எப்.ஐ.ஆர் போடப்படுகிறது. முதலமைச்சரே உங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் இருக்குமாக இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், அவர்கள் மீது கை வைக்க வேண்டாம் என கூறியுள்ளார்.
— TVK Vijay (@TVKVijayHQ) September 30, 2025



