ஆயுர்வேத மசாஜ் நிலைய பணியாளரை கடத்தி தாக்குதல்! பொலிஸ் உத்தியோகத்தரின் மோசமான செயல்
ஆயுர்வேத மசாஜ் நிலையமொன்றில் பணியாற்றும் பெண் ஒருவரை கடத்தி தாக்குதல் நடத்திய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் பாணந்துறை அடுத்துள்ள வாத்துவை, தல்பிட்டிய பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
பொலிஸ் உத்தியோகத்தர் கைது
அங்குள்ள மசாஜ் நிலையம் ஒன்றுக்குச் சென்ற பாணந்துறை குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மசாஜ் பணியாளரை தகாத உறவுக்கு அழைத்துள்ளார்.
அதற்கு அவர் இணங்க மறுத்ததை அடுத்து குறித்த பெண் பணியாளரைத் தாக்கி, மசாஜ் நிலையத்தில் இருந்த பணத்தையும் கொள்ளையடித்துள்ளார். அதன் பின்னர் மேற்குறித்த பெண் பணியாளரை கடத்தி வந்து வாத்துவை நகர மத்தியிலும் தாக்கியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்து தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மசாஜ் நிலையத்தில் கொள்ளையடித்த பணத்தில் இருந்து 27 ஆயிரம் ரூபாய் பணமும் அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 5 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
