யாழில் சிறுவர் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வூட்டும் நிகழ்வு(Photos)
யாழ்ப்பாணத்தில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் சிறுவர்
பாதுகாப்பு தொடர்பாக மாணவர் தலைவர்களுக்கான விழிப்புணர்வூட்டும் தேசிய
நிகழ்ச்சித் திட்டம் இடம்பெற்றுள்ளது.
யாழ். மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று (21) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றுள்ளது.
மாணவர்களின் ஒழுக்கநெறிகள்
தெரிவு செய்யப்பட்ட 87 பாடசாலைகளின் மாணவர் தூதுவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டு சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவர் தூதுவர்கள் பாடசாலைகளில் நடைபெறும் சிறுவர் தகாத செயற்பாடுகள், சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக அவதானம் செலுத்திலுள்ளனர்.
பாடசாலையில் மாணவர்கள் எவ்வாறு ஆரோக்கியமான சூழலையும், ஆரோக்கியமான குடும்ப சூழலையும், ஆரோக்கியமான சமூக சூழலையும் கட்டியெழுப்ப முடியும் மற்றும் மாணவர்களின் ஒழுக்கநெறிகள் தொடர்பாகவும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மாணவர் தலைவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri