அதிர்ச்சியளிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை
சந்தையில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 700 ரூபாவைத் தாண்டியுள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர்.
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் நேற்றையதினம்(20) ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 520 ரூபாவாக காணப்பட்டது.
இந்தநிலையில், எதிர்வரும் நாடகளில் ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் சில்லறை விலை 700 ரூபாவைத் தாண்டும் என வியாபாரிகளும் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்துள்ள விலை
இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயத்தின் விலை தற்போது சந்தையில் பாரிய அளவில் உயர்ந்துள்ளது.
மொத்த சந்தையில் உள்ளூர் வெங்காயம் வரத்து இல்லாததால், இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தின் விலை இவ்வாறு உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, நேற்று பல சில்லறை விற்பனை நிலையங்களில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் 600 முதல் 650 ரூபா வரையில் விற்பனை செய்யப்பட்டதாகவும், இதனையும் தாண்டி மேலும் சில பிரதேசங்களில் 700 ரூபாவிற்கும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் விற்பனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 2 நாட்கள் முன்

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் திடீர் மாற்றம்?... என்ன விஷயம் பாருங்க, ரசிகர்கள் வருத்தம் Cineulagam

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri
