நேபாளத்தில் மோசமடையும் வெள்ள நிலைமை! இலங்கையர்கள் தொடர்பில் தூதரகம் வெளியிட்ட அறிவிப்பு
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக இதுவரை எந்த இலங்கையரும் பாதிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் வெளிவிவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கு நிலைமை குறித்து, காத்மாண்டுவில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக அமைச்சு கூறுகின்றது.
இலங்கையர்களுக்கு தூதரகத்தின் அறிவுறுத்தல்
மேலும், சம்பந்தப்பட்ட பகுதியில் தற்போது நிலவும் வானிலை நிலைமை தொடர்பான தகவல்களை இலங்கை சமூகத்தினருக்கு தூதரகம் தொடர்ந்து தெரிவித்து வருவதாகவும் அமைச்சு கூறியுள்ளது.சம்பந்தப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் செய்வது தொடர்பாக இலங்கையர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள பல பகுதிகள் இன்று காலை (11) மீண்டும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பலர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பல நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் நேபாள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.