மன்னாரில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுப்பு (Photos)
பொது போக்குவரத்தில் மாற்றாற்றல் உடையவர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதிப்படுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கை மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாற்றாற்றல் உடையவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள்
இதன்போது அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகளில் மாற்றாற்றல் உடையவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு குறித்த ஆசனங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல், விழுது அமைப்பின் மாவட்ட இணைப்பாளர், தேனீ அமைப்பின் உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.


உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam