பொது போக்குவரத்து பயன்படுத்துபவர்களுக்கு கட்டாயமாகும் நடைமுறை
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
சுகாதாரத் துறையினால் சுற்றறிக்கை அல்லது விழிப்புணர்வு வெளியிடப்பட்டால், மூன்று தடுப்பூசிகளையும் பெற்றவர்கள் மட்டுமே பொதுப் போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என்ற உண்மையை நாம் கடைபிடிக்க வேண்டும்.
ஏனெனில் இது ஒரு தொற்றுநோயாகும். இந்த நிலைமை தொடர்பான முடிவுகளை சுகாதார அமைச்சு எடுக்க வேண்டும்.
அதற்கமைய 3 தடுப்பூசி பெற்றவர்கள் மாத்திரமே பொது போக்குவரத்தில் பயணிக்க வேண்டும் என நடைமுறையை பொத மக்கள் பின்பற்ற வேண்டும்.
இது தொடர்பில் எங்களுக்கு கடிதம் மூலம் எதுவும் தெளிவுப்படுத்தப்படவில்லை. எனினும் வெளியாகியுள்ள தகவல்களுக்கமைய சுற்றரிக்கை வெளியிட்டு எங்களுக்கு எழுத்து மூலம் அறிவிப்பார்கள்.
அவ்வாறு தகவல் கிடைத்தவுடன் பொது போக்குவரத்தில் தடுப்பூசி அட்டையை சேகரித்து ஆலோசனை வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.





ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் ரஜினியின் கூலி.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri
