அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை சிறுவனின் நெகிழ்ச்சி செயல்
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை சிறுவன் ஒருவர் புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவும் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.
பெர்விக் நகரில் உள்ள செயிண்ட் கேத்தரின் ஆரம்ப பாடசாலையில் 9 வயதான யெவின் கரியவசம் கல்வி கற்று வருகிறார்.
அவர் தன் தலைமுடியை புற்றுநோய் நோயாளிகளுக்கு தானம் செய்து வருகிறார். அத்துடன் விக்டோரியாவின் புற்றுநோய் கவுன்சிலுக்கு நிதி திரட்டுகிறார்.
நன்கொடை
புற்றுநோய் கவுன்சிலுக்கு எப்படி பயனுள்ள நன்கொடை அளிக்க முடியும் என்பதை தன் பெற்றோர் தனக்கு வழிகாட்டியதாக யெவின் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, புற்றுநோய் இல்லாத எதிர்காலத்திற்காக புற்றுநோய் கவுன்சிலை ஆதரிக்க தனது தலைமுடியை தானம் செய்யத் தயாராக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
தற்போது இரண்டு அவுஸ்திரேலியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
எனவே, யெவின் தனது தலைமுடியை வெட்டி தேவைப்படும் சிறுவர்களுக்கு தானம் செய்வதாகவும், அவர்களுக்காக நிதி திரட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
புற்றுநோய் ஆராய்ச்சியை ஆதரிக்கவும், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவுஸ்திரேலியர்களுக்கு அத்தியாவசிய சேவைகளை வழங்கவும் இந்த நிதியில் சேரவும் மக்களிடம் அவர் உதவி கோரியுள்ளார்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam