கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய வர்த்தகர்கள்
இலங்கை விமான பயணிகள் இருவர் இன்று (29) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களில் ஒருவர் கல்முனையைச் சேர்ந்த 37 வயதுடைய தொழிலதிபர் எனவும் இன்று அதிகாலை 03.00 மணிக்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-232 மூலம் டுபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அதிகாரிகள் மேலதிக விசாரணை
மற்றொரு நபர் கொழும்பு, கொட்டாஞ்சேனையை சேர்ந்த 26 வயதுடைய தொழிலதிபர் எனவும் அவர் இன்று அதிகாலை 03.00 மணிக்கு ஏர் அரேபியா விமானம் G.9.-587 மூலம் டுபாயிலிருந்து வருகை தந்துள்ளார்.

இதனையடுத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் 75,600 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிளாட்டினம் சிகரெட்டுகள் அடங்கிய 378 சிகரெட் அட்டை பெட்டிகளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.