ஊவா மாகாண பாடசாலைகளை மீண்டும் திறப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு
ஊவா மாகாணத்தில் 'டித்வா' சூறாவளியால் மூடப்பட்ட 888 பாடசாலைகள் ஏனைய அரச பாடசாலைகளை போலவே ஜனவரி 5 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் மனோகரி பொன்சேகா நேற்று ( 28) இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாடசாலைகளை மீண்டும் திறக்க திட்டம்
ஊவா மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளையும் ஜனவரி 5 ஆம் திகதி மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பசறை கல்வி வலயத்தில் உள்ள மடுல்சிம தமிழ் பாடசாலை,, பண்டாரவளை கல்வி வலயத்தில் உள்ள தொட்டலகல தமிழ் பாடசாலை, கஹகல தமிழ் பாடசாலை மற்றும் கவரகல தமிழ் பாடசாலை ஆகிய நான்கு பாடசாலைகளும் குறித்த தினத்தில் மீண்டும் திறக்கப்படாது.
மேலும் அந்த பாடசாலைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பாடசாலைகளில் பாதுகாப்பு மையங்கள்
ஊவா மாகாணத்தில் 181 பாடசாலைகள் சூறாவளியால் சேதமடைந்துள்ளதாகவும், இராணுவத்தினர், பொலிஸ், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள், வெளி மாகாணங்களைச் சேர்ந்த பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாகாணத்தில் உள்ள ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து ஒரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை மீட்டெடுக்க இணைந்து பணியாற்றியதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊவா மாகாணத்தில் 50 பாடசாலைகளில் பாதுகாப்பு மையங்கள் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், நேற்றைய (28) நிலவரப்படி 46 பாடசாலைகளில் இருந்து பாதுகாப்பு மையங்கள் அகற்றப்பட்டுள்ளன குறிப்பிட்டிடருந்தார.
இதனையடுத்து ஊவா மாகாண பிரதம செயலாளர் அனுஷா கோகுல மற்றும் ஊவா மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் குணரத்ன ஆகியோரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.