அவுஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் ஷேன் வோர்ன் காலமானார்
அவுஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வோர்ன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
அவர் தனது 52 ஆவது வயதில் காலமானார்.
தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றிருந்த போது இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
15 ஆண்டுகளாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்திய ஷேன் வார்ன், 145 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 708 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
உலக கிரிக்கெட் வரலாற்றில் டெஸ்ட் விக்கெட் பட்டியலில் தொடர்ந்தும் அவர் இரண்டாம் இடத்தில் உள்ளதுடன், ஷேன் வோர்ன் தனது கிரிக்கெட் வாழ்க்கையில் அவுஸ்திரேலியாவை பிரதிநிதித்துவப்படுத்திய 194 ஒருநாள் போட்டிகளில் 293 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri
