அவுஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரவுள்ள புதிய தடை
அவுஸ்திரேலிய அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கு புதிய தடையை விதித்துள்ளது.
அதாவது, அரசாங்கம் 16 வயதுக்குட்பட்டவர்கள் இனி YouTube சேனல்களை நடத்த தடை விதித்துள்ளது.
இந்தப் புதிய விதி டிசம்பர் முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் தடை
டிக்டொக்(TikTok), Instagram மற்றும் Snapchat போன்ற சமூக ஊடக தளங்களிலும் அவுஸ்திரேலியா ஏற்கனவே இதே போன்ற விதிகளை நடைமுறைபடுத்தி வருகின்றது.
யூடியூப்(YouTube) ஒரு காணொளி தளமாக இருந்தாலும், வழக்கமான சமூக ஊடகங்களின் அபாயங்கள் இங்கும் இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நிகழ்நிலையில்(Online) தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தைப் பார்த்த 37 சதவீத குழந்தைகள் அதை YouTube இல் பார்த்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியர்கள் ஆதரவு
இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகளின் பாதுகாப்பு தனது அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமானது என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் குறிப்பிட்டுள்ளார்.
சைபர் புல்லிங், ஆபாசமான உள்ளடக்கம், அதிகப்படியான திரை நேரம் ஆகியவை கவலைக்குரியவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைகள் யூடியூப்பை பயன்படுத்த முடியும், ஆனால் அவர்களுக்கென தனி யூடியூப் சேனல்களை வைத்திருக்க அனுமதி கிடையாது.பத்தில் ஒன்பது அவுஸ்திரேலியர்கள் இந்த முடிவை ஆதரித்துள்ளனர்.
எதிர்காலத்தில் இதேபோன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்த மற்ற நாடுகளுக்கு இது ஒரு முன்மாதிரியாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 5ஆம் நாள் திருவிழா





ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

பார்க்கிங் படத்திற்கு 3 தேசிய விருதுகள், ஜீ.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளர்.. விருது வென்றவர்கள் லிஸ்ட் Cineulagam
